» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இளவட்டக்கலை அலேக்காக தூக்கிய பெண்கள்

சனி 18, ஜனவரி 2020 7:33:37 PM (IST)நெல்லை மாவட்டம் பணகுடியில் இளவட்டக்கலை அலேக்காக பெண்கள் தூக்கினர்.

பணகுடி அருகே வடலிவிளையில் பொங்கலையொட்டி நடந்த விளையாட்டு போட்டியில் 10க்கும் மேற்பட்ட பெண்கள், 45 கிலோ எடையிலான உரலை தூக்கி அசத்தினர். நெல்லை மாவட்டம்,  பணகுடி அருகேயுள்ள வடலிவிளையில் மக்கள் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளையொட்டி சமத்துவப் பொங்கல் விழா, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். 

இதில் இளைஞர்களுக்கான பளு தூக்கும் போட்டி, சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டுப்போட்டி தனித்துவமிக்கவை.  இதே போல் இந்தாண்டுக்கான பொங்கல் விழாவும் விளையாட்டுப் போட்டிகளும் விமரிசையாக நடந்தது. இதில் இளைஞர்களையும், இளம்பெண்களையும் ஊக்குவிக்கும் வகையில் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடந்தது.

இதில் ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள் சுமார் 62 முதல் 80 கிலோ எடை வரையிலான இளவட்ட கல்லை தூக்கி தங்களது திறமைகளை  வெளிப்படுத்தினர். தொடர்ந்து பெண்களுக்கான போட்டிகள் நடந்தன. இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெண்கள் 45 கிலோ எடை கொண்ட உரலை தூக்கி தலைக்கு பின்னால் வீசி அசத்தினர். இதனை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். உரலை தூக்கும் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory