» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாகர்கோவிலில் போலியோ சொட்டு மருத்து முகாம்

ஞாயிறு 19, ஜனவரி 2020 11:37:36 AM (IST)நாகர்கோவிலில் குழந்தைகளை தாக்கும் இளம்பிள்ளை வாத (போலியோ) நோய் தடுப்பு முகாமினை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 1997ஆம் ஆண்டிற்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் போலியோவால் பாதித்த குழந்தைகள் கண்டறியப்படவில்லை.  இந்தியாவில் ஜனவரி 2011 முதல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக போலியோ நோயினால் எந்த குழந்தையும் பாதிக்கப்படாததால் 27.03.2014 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் இந்தியா போலியோ இல்லாத நாடாக சான்றளிக்கப்பட்டது. கடந்த ஜூன் 2016ஆம் ஆண்டு முதல் வாய்வழியாக மட்டும் அல்லாமல் ஊசி மூலமாகவும் போலியோ மருந்து  வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு இச்சிறப்பு முகாம்  ஒரே கட்டமாக 19.01.2020 அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் 1,52,422 குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.

இம்முகாம்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 1,236 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.4,944 பணியாளர்கள் (பொது சுகாதாரம். ஊட்டச்சத்து, சத்துணவு, நகராட்சி) பணியில் உள்ளனர்.  இது தவிர முகாம் நடைபெறும் இடங்களுக்கு குளிர்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 208 ஊர்திகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தேவையான சொட்டு மருந்து மாவட்ட துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சியில் உரிய குளிர்பதன முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் கூடும் இடங்களான புகைவண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூம்புகார் படகுத்துறை மற்றும் காந்திமண்டபம் ஆகிய இடங்களில்; 20 முகாம்களும், உரிய பேருந்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் நடமாடும் குழுக்கள் 14-ம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.  முகாம் ஆய்வுப் பணிகளுக்கு 146 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே, இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில்5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறுமாறு தெரிவித்தார்.

இம்முகாமில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர்  கிருஷ்ணகுமார், ஊராட்சி ஒன்றியத்தலைவர் (இராஜாக்கமங்கலம்) ஐயப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜாண்சிலின் விஜிலா,  துணைஇயக்குநர் (சுகாதாரப்பணிகள்) போஸ்கோ ராஜன், முதல்வர் (ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை) சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர்; அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் மரு.எஸ்.ஆறுமுகவேலன், குழந்தைகள் நல அலுவலர் மரு.பகவதிபெருமாள் மற்றும் அரசு மருத்துவர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory