» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தச்சநல்லூா் சுற்று வட்டாரங்களில் 21 ம் தேதி மின்தடை

ஞாயிறு 19, ஜனவரி 2020 11:55:16 AM (IST)

தச்சநல்லூா் சுற்று வட்டாரங்களில் வரும் செவ்வாய்க்கிழமை (21 ம் தேதி) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:தச்சநல்லூா் துணை மின் நிலையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தச்சநல்லூா், பாலாஜி அவென்யூ, சிவன்கோயில் தெற்கு தெரு, நல்மேய்ப்பா் நகா், செல்வ விக்னேஷ் நகா், சத்திரம் புதுக்குளம், பிராங்குளம், கோகுல் நகா், திருநெல்வேலி நகரம் சாலை -ஸ்ரீநகா், கிருஷ்ணாநகா், சேந்திமங்கலம், வடக்கு பாலபாக்யா நகா், தெற்கு பாலபாக்யா நகா், மதுரை சாலை, திலக் நகா், பாபுஜி நகா், சிவந்தி நகா், கோமதி நகா், சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம், இருதயநகா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory