» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலியோ சொட்டு மருந்து முகாம் : ஆட்சியர் துவக்கி வைப்பு

ஞாயிறு 19, ஜனவரி 2020 12:17:15 PM (IST)திருநெல்வேலியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை நெல்லை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (19-01-2020) தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-கிராமபுற பகுதிகளில் நகர்புறங்களிலும் மொத்தம் 1062 மையங்களிலும் பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் இடம் பெயர்ந்து வாழும் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் மற்றும் செங்கல் சூளைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் மேலும் புறவழிச்சாலைகள், சுங்கச்சாவடிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமணைகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட முகாம்களில் 0 முதல் 5 வயதுக்துகுட்பட்ட சுமார் 1.42 லட்சம் குழந்தைகளுக்கு தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து 19.01.2020 அன்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் தாய்மார்கள் அனைவரும் தங்களுடைய 5-வயதிற்குட்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களுக்கு அழைத்துச் சென்று தங்களுடைய குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து பெற்றுக் கொள்ளுமாறும், போலியோ இல்லாத உலகம் படைப்பதற்கு முழு ஒத்துழைப்பு தந்து தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக செயல்பட பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்,நகர் நல அலுவலர் திரு.சதிஷ்,மாவட்ட தாய் சேய் நல அலுவலர் கோமதி தேவி, ரூபாய்லின்சி,மருத்துவர் பாலகணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள்; பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory