» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளி மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர் கைது

செவ்வாய் 4, பிப்ரவரி 2020 6:06:03 PM (IST)

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரில் பிளஸ் 2 மாணவரை கத்தியால் குத்திய சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர்  அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்  ஷாருக்கான் (வயது 17).   இவரது தந்தை இஸ்மாயில். வீராணம் பகுதியை சேர்ந்தவர். அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்து வருபவர் வீரகேரளம்புதூர் முருகன் என்பவரது மகன் சரவணன் (17). இவர்கள் இருவரும் நண்பர்கள் இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலையில் ஷாருக்கான் வீராணத்திலிருந்து பள்ளிக்கு செல்ல பஸ் மூலம் வீரகேரளம்புதூர் பஸ் நிலையம் வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மாணவர் சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாருக்கானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஷாருக்கான் கழுத்து மற்றும் கையில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஷாருக்கான் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் பற்றி வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வழக்கு பதிவு செய்து மாணவர்; சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார். பள்ளி அருகில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Tirunelveli Business Directory