» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எழுபது வயதிலும் புத்தகம் வாசிக்கும் ஆர்வம் : மூதாட்டிக்கு நெல்லை ஆட்சியர் பாராட்டு

திங்கள் 10, பிப்ரவரி 2020 6:26:05 PM (IST)

திருநெல்வேலியில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் எழுபது வயது மூதாட்டி கெளரவிக்கப்பட்டார். 

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மையம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் - பதிப்பாளா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நெல்லை புத்தகத் திருவிழா-2020 பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவில் 127 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில், பல்வேறு துறைகளைச் சாா்ந்த 5 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதில் இன்று சேரன்மகாதேவி யைச் சேர்ந்த ராஜம்மாள் (70) என்பவர் வந்துள்ளார். தாெடர்ந்து அங்கு புத்தகம் வாங்க காசில்லை.வாசித்து விட்டு போகிறேன் என ஸ்டால்களில் கூறியுள்ளார். மூதாட்டியின்  புத்தக ஆர்வத்தைப் பாராட்டி பலர் பாட்டிக்கு புத்தகங்கள் அன்பளிப்பு செய்யத் துவங்கினர். 

இது குறித்து அறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர்சதீஸ் பாட்டியை வரவழைத்து மேடை ஏற்றி கவுரவித்தார். மேலும் நிறைய புத்தகங்களுடன் ஆட்சியரின் சொந்த வாகனத்தில் வீட்டிற்கு ராஜம்மாள் அனுப்பி வைக்கப்பட்டார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Tirunelveli Business Directory