» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செவிலியர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு : 2 பேருக்கு தூக்கு தண்டனை

புதன் 12, பிப்ரவரி 2020 6:10:06 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 2008ம் ஆண்டு நடைபெற்ற செவிலியர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை மகளிர் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே வைராவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை 2008ம் ஆண்டு அதே பகுதியினை சேர்ந்த வசந்த குமார், ராஜேஷ் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கல்லிடைகுறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும். சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு நெல்லை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நெல்லை மகளிர் நீதிமன்ற நீதிபதி இந்திராணி இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதன்படி வசந்த குமார், ராஜேஷ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)


Sponsored Ads

Tirunelveli Business Directory