» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று விட்டேன்- அப்பாவு பேட்டி

புதன் 12, பிப்ரவரி 2020 6:58:27 PM (IST)

ராதாபுரம் தொகுதிக்கு நடத்தப்பட்ட மறுவாக்கு எண்ணிக்கையில் நான் வெற்றி பெற்று விட்டேன் என்று முன்னாள் எம்எல்ஏ அப்பாவு கூறினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் ஓட்டுகள் முறை கேடாக எண்ணப்பட்டு வெற்றி அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். தேர்தல் வழக்குகளை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் எதிர் தரப்பினர் இழுத்தடிப்பதால் நீண்ட இடைவேளைக்கு பிறகு நீதிமன்றம் தபால் ஓட்டுகளையும், கடைசி 3 சுற்று வாக்குகளையும் எண்ண உத்தரவிட்டது.

இதில் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டு நானும், இன்பதுரையும் கையெழுத்திட்டுள்ளோம். இதில் நான் 98 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த முடிவை அறிவிப்பதற்குள் அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கி விட்டார்கள். உச்ச நீதிமன்றம்  தான் தீர்ப்பை அறிவிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றம் விரைவில் தடையை நீக்கி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் என்றும் நம்புகிறேன் என்று தெரிவித்தார். பேட்டியின் போது  தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப் மற்றும் ஏ.எல். எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory