» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி விமான நிலைய பாதுகாப்புக்கு அதி நவீன கருவிகள் அறிமுகம்

புதன் 12, பிப்ரவரி 2020 9:01:20 PM (IST)தூத்துக்குடி விமான நிலைய பாதுகாப்புக்கு 3 வகையான அதி நவீன கருவிகள் அறிமுகப்படுத்தும் விழா இன்று நடைபெற்றது. 

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் இன்று விமான நிலைய பாதுகாப்புக்கு 3 வகையான அதி நவீன கருவிகள் அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. இதில் ரூ. 15 லட்சம் மதிப்பில் இவிடி எனப்படும் எக்ஸ்போசிவ் டிடெக்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் வெடி மருந்துகளை வெறும் ஏழு நொடிகளில் கண்டுபிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  ரூ. 25 லட்சம் மதிப்பில் இடிடி எனப்படும் போதைபொருட்களை கண்டறியும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் விமான நிலையத்திற்கு வருபவர்களின் பைகளில் ஏதேனும் போதை பொருட்கள் இருந்தால் கண்டறிய  இயலும்.  

மேலும் விமான நிலையத்தில் வெடிகுண்டு ஆபத்துகளிலிருந்து தப்பிக்க ரூ. 33 லட்சம் மதிப்பில் இஓடி எனப்படும் பாம்சூட் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழாவில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பாதுகாப்பு கருவிகளை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில், விமான நிலைய மேலாளர் ஜெயராமன், அனுசுயா, இன்ஸ்பெக்டர் நித்யா, மற்றும்  விமான நிறுவனங்களின் அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். மக்கள் கருத்து

PoovarasanFeb 14, 2020 - 03:02:46 PM | Posted IP 108.1*****

Air port Job qualification plz....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory