» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ ஆர்ப்பாட்டம்

வியாழன் 13, பிப்ரவரி 2020 7:27:01 PM (IST)தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசியில் சிஐடியூ சார்பில்  மத்திய பாஜக அரசு  வங்கி, எல்ஐசி, பிஎஸ்என்எல், ரயில்வே  ஆகியவற்றை தனியார் மயம் ஆக்கும் திட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் - கல்வி, சுகாதரத்திற்க்கு, அதிக நிதி ஒதுக்கமால் மிகவும் குறைவாக  ஒதுக்கியுள்ளதை கண்டித்தும்  அரசு மருத்துவமனையை தனியாருக்கு குத்தகைக்கு  விடுவதை தடுத்து நிறுத்திட கோரியும்  கிராம புற வேலை திட்டத்திற்கு அதிக நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் தென்காசி சிஐடியூ சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  தென்காசி சிஐடியூ நிர்வாகி  லெனின் குமார் தலைமை தாங்கினார். சிஐடியூ நிர்வாகிகள் குருசாமி, நாகரத்தினம், கருப்பையா,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நெல்லை மாவட்ட  பீடி தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராஜாங்கம், சிபிஎம் மாவட்ட தலைவர் அயூப்கான் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிஐடியூ மாவட்ட தலைவர் வேல்முருகன் மக்கள் விரோத மத்திய மாநில அரசுகளை கண்டித்து பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் ஆரிய முல்லை, பேராசியை சங்கரி. பச்சையப்பன், கற்பகவள்ளி, ராமமூர்த்தி அய்யப்பன், மாரியப்பன், ஆறுமுகம் ,முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory