» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 13, பிப்ரவரி 2020 8:00:12 PM (IST)

தென்காசி மாவட்டத்தில்  நாளை (14ம் தேதி) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழக வருவாய்த் துறை சார்பில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று மக்களை சந்தித்து மக்கள் குறைகளை கேட்டறியும் அம்மா திட்ட முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் நாளை (14ம் தேதி)  அம்மா திட்ட முகாம்கள்  சங்கரன்கோவில் தாலுகா களப்பாகுளம், திருவேங்கடம் தாலுகா கரிசல்குளம் குறுவட்டம் மதுராபுரி, தென்காசி தாலுகா மேலகரம் பேரூராட்சி பகுதி, செங்கோட்டை தாலுகா கணக்கப்பிள்ளைவலசை, வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலை குறுவட்டம்  பாலபத்திர ராமபுரம், ஆலங்குளம் தாலுகா நாரணபுரம், சிவகிரி தாலுகா சிவராயகிரி பகுதி-2,  கடையநல்லூர் தாலுகா புளியங்குடி குறுவட்டம் மலையடிக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் தமிழக அரசின் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித் தொகை பரிசீலனை விண்ணப்பம் உள்பட அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, சாலை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட தேவைகளை தங்களது கிராமத்திற்கு கிடைத்திடும் வகையில் வருவாய் துறை மக்களுக்கு ஆற்றிவரும் சேவையை துரிதப்படுத்தப்பட்டு அரசின் திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைய இதன் மூலம் வழிவகை செய்யப்படுகிறது. எனவே அந்தந்த பகுதி மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory