» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கண் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி வாக்காளர் அட்டை : நெல்லையில் வழங்கல்

வியாழன் 13, பிப்ரவரி 2020 8:42:38 PM (IST)

திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் இன்று ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டு கண்பார்வையில்லாத இரண்டு நபர்களுக்கு பிரெய்லி எழுத்துக்கள் அடங்கிய வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இன்று (13-02-2020) வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2020 குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் ஞானசேகரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் முன்னிலையில் இன்று (13.02.2020) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் மற்றும் பார்வையாளர்அவர்கள் தெரிவித்ததாவது:-இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளை உள்ளடக்கிய 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 12,68,253 ஆண் வாக்காளர்களும் 13,11,242 பெண் வாக்காளர்களும் 93 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 25,79,588 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 25,79,588 நபர்கள் உள்ளார்கள்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலினை வட்டாட்சியர் அலுவலங்கள், கோட்டாட்சியர் அலுவலங்கள்,வாக்காளர் பதிவு அலுவலங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்காளர்கள் பார்வையிடலாம். படிவம் 8ஏ மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க படிவம் 6 ஏல் விண்ணப்பிக்க கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகள் மேம்பாடு குறித்து இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனைகளும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)


Sponsored Ads





Tirunelveli Business Directory