» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பதவியேற்பு

வெள்ளி 14, பிப்ரவரி 2020 11:42:01 AM (IST)

தென்காசி புதிய மாவட்டத்திற்கு புதிதாக முதன்மை கல்வி அலுவலராக  நியமிக்கப்பட்டுள்ள கருப்பசாமி பதவியேற்று கொண்டார். 

தென்காசி தலைமையிலான புதிய மாவட்டம் துவக்கப்பட்ட பிறகு  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. மற்ற அலுவலகங்கள் எதுவும் தென்காசியில் தொடங்கப்படவில்லை. இவை அனைத்தும் திருநெல்வேலி யிலேயே செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தென்காசி ஐசிஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியரின் அறைக்கு அருகில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட முதல் முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கருப்பசாமி  தற்காலிக அலுவலகத்தில்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவியேற்று கொண்டார்.

விழாவில்  தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சவுந்திர சேகரி, சங்கரன்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர்  சம்பத்குமார், மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி சீனிவாசன், நெடுவயல் அச்சன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஜெய பிரகாஷ் ராஜ், தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செந்தூர் பாண்டியன், பள்ளி துணை ஆய்வாளர் செய்யது இப்ராஹிம், கண்ணன், தலைமை ஆசிரியர்கள் ஆரோக்கிய ராசு, ராமர், செய்யது இப்ராஹிம் மூசா , ரமேஷ், அலுவலக கண்காணிப்பாளர் பரமசிவம், தொல்காப்பியன் மற்றும் பலர் கலந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் கருப்பசாமிக்கு  வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory