» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி ரயில் நிலையத்தை இடம் மாற்றும் திட்டத்தில் பல பிரச்சனைகள் உள்ளது - ஆட்சியர் கருத்து!!

வெள்ளி 14, பிப்ரவரி 2020 4:31:22 PM (IST)தூத்துக்குடி ரயில் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்றுவதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். 

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய தூத்துக்குடி இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) நடத்திய தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பற்றிய தொலைநோக்கு என்ற தலைப்பிலான கலந்துரையாடல் டி.எஸ்.எப் கிராண்ட் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. தூத்துக்குடி சிஐஐ தலைவர் கிருஷ்ணா சங்கர் தலைமை தாங்கினார். சிஐஐ தமிழ்நாடு துணை தலைவர் ஹரி தியாகராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், தொழில்நகரமாக உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் வரஉள்ளன. இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தை மாவட்டத்திலுள்ள குலசேகரபட்டணத்தில் அமைக்கஉள்ளது, நாட்டிலே இரண்டாவது ராக்கெட் ஏவுதளமான இதற்காக 2300 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணி விரைவில் முடிவடையும். அடுத்ததாக தூத்துக்குடியில் துபாயில் உள்ள நிறுவனம் 49000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இதெல்லம் 5முதல் 10 ஆண்டுகளுக்குள் இங்கு வந்து விடும். இதன் மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பை பெறுவார்கள், அதை சார்ந்த பல தொழிற்நிறுவனங்கள் வரும்,மாவட்டத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். தூத்துக்குடி இரயில் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது, ஆனால் அதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இருந்தபோதும் சிஐஐ போன்ற அமைப்புகள் பாராளுமன்ற உறுப்பினர், ரயில்வே உயர் அதிகாரிகள்,மத்திய அரசு மூலமாக அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். 

தூத்துக்குடி முதல் மணியாச்சி வரை சாலை அமைப்பதற்காக நிலம் கையகபடுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்திற்கு 600 ஏக்கர் நிலம் கையக படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 100 ஏக்கர் கையகபடுத்தபடும் நடைபெற்று வருகிறது. இரவு நேர விமான சேவைக்கு வனத்துறை அனுமதி வழங்கவேண்டி உள்ளது. விரைவில் இரவு நேர விமான சேவை இயக்கபடும். மாவட்டத்தில் சூரியஒளி மின்திட்டங்கள் செயல்படுத்தபட உள்ளன. உடன்குடி அனல்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. கயத்தாறு பகுதியில் ஏராளமான காற்றாலைகள் மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை வழங்குவதற்காக கடல் நீரை நன்னீராக்கும் 60 எம்எல்டி சுத்திகரிப்பு ஆலை அமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பல தொழிற்சாலைகள் வரஉள்ளன. ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே 50 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் அருகாமையில் அமையும். 

தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் வருவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும். முக்கியமான நோக்கம் தூத்துக்குடியில் முற்றிலும் சுற்றுசூழல் பாதிப்பு இல்லாத பகுதியாக மாற்றவேண்டும் என்பதுதான். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தொழிற்சாலைகள் வர உள்ளதால் தொடர்ந்து சிறு சிறு உற்பத்தி நிறுவனங்கள் வரும் அதற்கு தேவையான நிலங்கள் தயாராக உள்ளன என்றார். அமைய உள்ளதால் சிஐஐ தொழில் முதலீட்டாளர்கள் சந்திப்பை நடத்தவேண்டும்,இது அதற்கு தகுந்த நேரம் என குறிப்பிட்டார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி,விவசாயம், உடன்குடி கருப்பட்டி உள்ளிட்ட பல தொழில் வளங்கள் அவற்றை மேம்படுத்தும் வகையில் பல தொழில் நிறுவனங்கள் கூட்டத்தை நடத்த மேம்படுத்த வேண்டும்.தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகள் நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனங்கள் பகுதிகளில் தாமாக முன்வந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து தூத்துக்குடி இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் புதிய தலைவராக பிரவீண் மேத்யு, துணை தலைவராக மைக்கல் மோத்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து வருங்கால சந்ததியினரை தொழில் முனைவோர்களாக உருவாக்குதல் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தங்கமயில் ஜீவல்லரி அதிபர் பல்ராமா கோவிந்த தாஸ், கோவை ரூட்ஸ் இந்தியா மற்றும் ஆர்.வி குரூப் நிறுவன மேலாண் இயக்குநர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.


மக்கள் கருத்து

RealFeb 18, 2020 - 09:10:35 AM | Posted IP 173.2*****

200 feet road widening is only romour

RealFeb 17, 2020 - 07:08:52 PM | Posted IP 162.1*****

200 feet road is only rumour.

UmaumaFeb 16, 2020 - 09:42:07 PM | Posted IP 162.1*****

Please make the roads to the peole to walk freely respected collector please have a walk in the busyhour on the roads of northcar st east car st second gate and in bazarstreets then only u can realize our difficulties especially in northcar st no body can walk easily

M.sundaramFeb 16, 2020 - 09:05:25 PM | Posted IP 173.2*****

A big heart is required for development. But on actual ground we having narrow mind and want to live in a congested area. We want development but without compromise for essential basic infrastructure. See Gandhinagar in Gujarat and Mysore in Karnataka.

TN69 Govt BusesFeb 15, 2020 - 06:50:46 PM | Posted IP 162.1*****

Tuticorin is out dated after we get freedom, when politics was introduced the tuticorin. Railway Station, Integrated Bus terminal, ESI Hospital, 200feet Roads widening from old port to FCI Godown, etc., are all not yetdone by boneless spine Government officials till Now.

NARTHAFeb 15, 2020 - 03:55:14 PM | Posted IP 173.2*****

தூத்துக்குடி தொழிற்ச்சாலைகள் நிறைத்த மாநகரம் . ஆனால் மக்கள் வாழ தகுதியில்லாத மாநகரம்..

ப. சுகுமார்Feb 14, 2020 - 10:49:07 PM | Posted IP 173.2*****

எல்லாத் திட்டங்களும் சிறப்பாக நடைபெற்றால் தூத்துக்குடி ஒரு பெரிய தொழில் நகரமாக மாறும். எனினும், தூத்துக்குடியில் சுற்றுச் சூழல் காக்கப்படும் என்பதற்கு எந்தவொரு உத்திரவாதமும் இல்லை. ஏற்கனவே, தூத்துக்குடி நகரம் மாசு நிறைந்த நகரமாகத்தான் இருக்கிறது. ,

K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.Feb 14, 2020 - 07:52:38 PM | Posted IP 173.2*****

We appreciate the initiative taken by the CII Thoothukudi, for the development of Thoothukudi district.we fully support you.

தமிழ்ச்செல்வன்Feb 14, 2020 - 06:58:28 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் முற்றிலும் சுற்றுசூழல் பாதிப்பு இல்லாத பகுதியாக மாற்றவேண்டும் என்பதுதான் அப்படின்னு சொல்லுவாங்க. ஆனால் நடைபெறும் அனைத்து திட்டங்களும் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்துபவைதான் என்பதுதான் உண்மை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory