» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பட்ஜெட்டில் தூத்துக்குடியின் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு: வர்த்தக தொழில் சங்கம் வரவேற்பு

வெள்ளி 14, பிப்ரவரி 2020 5:22:08 PM (IST)

தமிழக அரசின் 2020 – 2021-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தூத்துக்குடிக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் தலைவர் ஜோ பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழக அரசின்  2020 – 2021-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சிறப்பு அம்சமாக தொழில்துறைக்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.  இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க ஏதுவாக அமையும். சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், புதிய தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய தொழில் முனைவோருக்கு மானியத்துடன் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் மிகவும் வரவேற்கத்தக்கது. 

இளைஞர்கள் நலனைக் கருத்தில் கொண்டு விளையாட்டை மேம்படுத்தும் விதமாக விளையாட்டுத்துறைக்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், நெல்லை கங்கைகொண்டானில் உணவுப் பூங்கா அமைக்கப்படவிருப்பதும் சிறப்பு அம்சமாகும்.  அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் கோரிக்கைகளில் ஒன்றான தூத்துக்குடி சிப்காட்டில் கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது. மேலும் தூத்துக்குடியில் பிரம்மாண்டமான பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.  

மீன்வளத்துறையினை ஊக்குவிக்கும் விதமாக ரூ.1219 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது சிறப்பம்சமாகவும் உள்ளது. தகவல் தொழில் நுட்ப துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும, திறன் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் மிகவும் வரவேற்கத்தக்கது. இதனால் பலர் வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது. தூத்துக்குடியில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் சிறப்பம்சமாகும். பொதுவாக தமிழக பட்ஜெட் (2020 – 2021) சிறப்பம்சங்களுடன் கூடிய பட்ஜெட்டாக அமைந்துள்ளது என தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ் கூறினார்.


மக்கள் கருத்து

NARTHAFeb 15, 2020 - 03:59:11 PM | Posted IP 108.1*****

தூத்துக்குடி வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு மிகமிக முக்கிய காரணம் இந்த வர்த்தக தொழில் சங்கம் தான். நன்றி

NARTHAFeb 15, 2020 - 03:50:37 PM | Posted IP 173.2*****

ஐயா நீங்க ஏந்த நாட்டுல இருக்கீங்க ? இது தமிழ்நாடு பட்ஜெட் . சும்மா ஜால்ரா போடாதீங்க

ஒருவன்Feb 15, 2020 - 09:42:24 AM | Posted IP 162.1*****

கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலை எத்தனை வருசமாக சொல்லி கொண்டு இருக்கிறார்கள் ???

OopsuFeb 15, 2020 - 02:14:06 AM | Posted IP 162.1*****

கேவலமான roads. ஒரே குப்பை கூளங்கள். ரொம்ப மகிழ்ச்சி. ஆனா அகப்பையில் வருமா? உருப்படியா ரெண்டு Train இல்லை. பெருசா பாராட்ட வந்திட்டங்க.

K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.Feb 14, 2020 - 07:41:41 PM | Posted IP 173.2*****

We welcome this Budget which give employment to many people.

வடிவேல்Feb 14, 2020 - 05:48:03 PM | Posted IP 108.1*****

1m gate 2m gate palam varumaa boss?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory