» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இரண்டு குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

வெள்ளி 14, பிப்ரவரி 2020 5:36:31 PM (IST)

களக்காடு அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் 2 குழந்தைகளுடன் மாயமானார். 

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ உப்பூரணி கீழத்தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன் முத்துக்குட்டி ( 29) சமையல் மாஸ்டராக உள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் மகள் தேவகிருபா (27) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு வெற்றித்துரை (5), என்ற மகனும், லதா ஜாஸ்பர் (4) என்ற மகளும் உள்ளனர். 

இந்நிலையில் முத்துக்குட்டி சமையல் வேலைக்காக வெளியூர் சென்று விட்டு கடந்த 7-ந் தேதி அதிகாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த மனைவி தேவகிருபா மற்றும் மகன், மகளை காணவில்லை. தொடர்ந்து அவர் உறவினர் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி, குழந்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தைகளுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory