» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு : பாளையங்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்

திங்கள் 17, பிப்ரவரி 2020 11:06:20 AM (IST)

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், பல்வேறு கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், கடையநல்லூர், ஏர்வாடி, பொட்டல்புதூர் உள்பட பல இடங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இந்த நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். 150 மாணவிகள் உள்பட 700க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸார் கல்லூரி முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory