» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்ட பாஜக புதிய நிர்வாகிகள் : மாவட்ட பாஜக தலைவர் அறிவிப்பு

திங்கள் 17, பிப்ரவரி 2020 12:00:01 PM (IST)

தென்காசி மாவட்ட பாஜக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ராமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கேசவ விநாயகர், மதுரை கோட்ட பொறுப்பாளர் சுப. நாகராஜன், கோட்ட அமைப்புச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் ஒப்புதலுடன் தென்காசி மாவட்ட பாஜக துணைத் தலைவர்களாக  சுசிலா, பாலகுருநாதன்,  பாலகிருஷ்ணன்,        பாலமுருகன்,முத்துக்குமார் ஆகியோரும், மாவட்ட பொதுச் செயலாளர் களாக ராஜேஷ்ராஜா, சுப்பிரமணியன்  ஆகியோரும், மாவட்ட செயலாளர் களாக முத்துலட்சுமி, மாலதி, அருள்செல்வன், மாரியப்பன், பால சீனிவாசன் ஆகியோரும் மாவட்ட பொருளாளராக  ராமநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

எனவே தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்தப் புதிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி தென்காசி மாவட்டத்தில் பாஜக வளர்ச்சி  பணிகளில்  சிறப்புடன் செயல்பட  அன்புடன் வேண்டுகிறேன் இவ்வாறு  தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ராமராஜா அறிக்கையில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory