» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறை : தென்காசி ஆட்சியர் அறிவிப்பு

திங்கள் 17, பிப்ரவரி 2020 1:01:24 PM (IST)

தென்காசி மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், நகராட்சிகள் வரையிலான அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை பணிகள் நாளை (18ம் தேதி) தொடங்குகிறது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மாநில மறுவரையறை ஆணையத்தின் உத்தரவின்பேரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் நகராட்சி உள்ளடக்கிய அமைப்புகளின் வார்டு மறுவரையறை பணிகள் இன்று (18ம் தேதி) தொடங்கி கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது. அதன்படி நாளை (18ம் தேதி) வார்டு மறுவரையறை வரைவு முன்மொழிவுகள், வெளியிடுதல் மற்றும் அதன் மீது அரசியல் கட்சிகள், பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் மறுப்புகளை அளிக்க கேட்டல் , அரசியல் கட்சிகள், பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் மறுப்புகள் மீதான கருத்து கேட்பு கூட்டத்திற்கான அறிவிப்பு மாவட்ட மறுவரையறை அலுவலரால் வெளியிடப்படும்.வரும் 22ம் தேதி அரசியல் கட்சிகள் பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் மறுப்புகளை சமர்ப்பிக்க கடைசி நாளாகும். 25ம் தேதி அரசியல் கட்சிகள் பொது மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி மாவட்ட மறுவரையறை அலுவலர் கருத்துக்களைப் பெற்று அவற்றுக்கான தீர்வு காணப்படும்.

27ம் தேதி தமிழ்நாடு மாநில மறுவரையறை ஆணையத்தால் அரசியல் கட்சிகள் பொதுமக்களின் கருத்து கேட்டு கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.வரும் மார்ச் 10ம் தேதி மாலை 3 மணிக்கு தமிழ்நாடு மாநில மறு வரையறை ஆணையத்தால் அரசியல் கட்சிகள் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அவற்றுக்கான தீர்வு காணப்படும். மேற்கண்டவாறு உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்படவுள்ள வார்டு மறுவரையறை பணிகளில் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி தேர்வு செய்துகொள்ளலாம். இவ்வாறு தென்காசி ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory