» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பெண்கள் ஊர்வலமாக போராட்டம்

திங்கள் 17, பிப்ரவரி 2020 6:29:11 PM (IST)

நெல்லை மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பெண்கள், சிறுவர், சிறுமிகள் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி சென்னையில் நடந்த பேரணியில் தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக பெண்கள், சிறுவர்-சிறுமிகள் பேரணி, பொதுக்கூட்டம் நடந்தது. பேரணிக்கு மாவட்ட தலைவர் சாதிக் தலைமை தாங்கினார்.
 
பேரணி மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் முன்பு தொடங்கி ஆசாத் சாலை, பஜார் திடல் வழியாக ஜின்னா திடலை வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட பெண்களும், சிறுவர்சிறுமிகளும் தங்கள் கைகளில் தேசிய கொடியை ஏந்தியவாறு தமிழக அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த பேரணியையொட்டி மாநகர போலீஸ் துணை போலீஸ் கமி‌ஷனர் சரவணன், கூடுதல் துணை கமி‌ஷனர் வெள்ளத்துரை ஆகியோர் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory