» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வார்டு மறுவரையறை செய்யும் ஆலோசனை கூட்டம்

திங்கள் 17, பிப்ரவரி 2020 8:42:25 PM (IST)திருநெல்வேலி மற்றம் தென்காசி மாவட்ட பிரிவினைக்கு பின் ஊரக மற்றம் நகர்பற வார்டு மறுவரையறை செய்யும் அலுவலர்களுடன் பணிகள் மேம்பாடு குறித்து ஆய்வு  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது :-திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு 9 ஊராட்சி ஒன்றியங்களும், தென்காசி மாவட்டத்திற்கு 10 ஊராட்சி ஒன்றியங்களாகவும் பிரிக்கப்பட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 1731 கிராம ஊராட்சி வார்டுகள், 122 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் 12 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு வார்டு மறுவரையறை செய்யப்பட்டு பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் பெறும் பொருட்டு 18.02.2020 முதல் அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் வெளியிடும் பொருட்டு நடைபெறுகிறது.

மேலும், மாவட்ட மறுவரையறை அலுவலர் 25.02.2020 அன்று அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி கருத்துக்கள் மற்றும் மறுப்புரைகள் பெற்று அவற்றிற்கான தீர்வு காணுதல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார். பின்னர் திருநெல்வேலி மற்றம் தென்காசி மாவட்ட பிரிவினைக்கு பின் மறுவரையறை செய்யப்பட்ட உத்தேச வரைப்படத்தினை மாவட்ட ஆட்சியர்   வெளியிட்டார். 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம்,ஊரக வளாச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம்லால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்,உதவி இயக்குநர் ஊராட்சிகள் அருணாச்சலம், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory