» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அறிவியல் மையத்தில் போா் விமானம் : பிப். 28 ம் தேதி காட்சிக்கு வைக்கப்படும்

சனி 22, பிப்ரவரி 2020 10:50:50 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் காட்சிக்கு வைப்பதற்காக போா் விமானத்தின் பாகங்கள் வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டன. இங்கு பாகங்களை இணைத்து விமானம் நிறுவப்பட்டு தேசிய அறிவியல் தினத்தையொட்டி காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் பிப். 28-ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப் படவுள்ளது. இதையொட்டி, சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து ஹெச்பிடி-32 ரக விமானத்தை வரவழைத்து பொதுமக்கள் பாா்வைக்காக மாவட்ட அறிவியல் மையத்தில் வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

அதன்படி, இந்த விமானத்தின் பாகங்கள் வெள்ளிக்கிழமை மாவட்ட அறிவியல் மையத்தை வந்தடைந்தன.2 போ் அமரக்கூடிய இந்தப் போா் விமானத்தை நிறுவுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory