» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே மோட்டார் பைக்குகள் மோதல் : படு காயமடைந்த பெண் சாவு

சனி 22, பிப்ரவரி 2020 1:07:20 PM (IST)

நெல்லை அருகே பைக்குகள் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி , ஒரு மகள் உள்ளார். கடந்த ஆறாம் தேதி முப்பிடாதி தனது தந்தை சங்கரநாராயணனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு தனியார் ஐடிஐ-அருகே சென்றபோது பின்னால் வந்த மற்றொரு பைக் மோதியதில் 3 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக முப்புடாதி பாளை., அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முப்பிடாதி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory