» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தேநீர் குடித்து கொண்டிருந்தவர் திடீர் உயிரிழப்பு

சனி 22, பிப்ரவரி 2020 1:43:49 PM (IST)

பாளையங்கோட்டையில் இன்று காலை தேநீர் குடித்துக் கொண்டிருந்த தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பாளை அருகே உள்ள கீழப்பாட்டம் ஜெயம் நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆசீர்வாதம் மகன் செல்லத்துரை (41). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இன்று காலை வேலைக்கு புறப்பட்டு சென்ற செல்லத்துரை சீவலப்பேரி ரோடு பள்ளிவாசல் அருகே உள்ள கடையில் தேநீர்  குடித்துக் கொண்டிருந்தார். 

அப்போது அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செல்லத்துரை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory