» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பலாத்கார வழக்கில் தொழிலாளி கைது : இளம்பெண்ணிற்கு பிறந்த குழந்தை இறந்ததால் பரபரப்பு

சனி 22, பிப்ரவரி 2020 6:17:08 PM (IST)

நெல்லை அருகே பலாத்கார வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் இளம் பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 24 வயது மகள் ஆலங்குளம் துத்திகுளம் பகுதியை சேர்ந்த உறவினரான சுப்பையா மகன் முத்துக்குமார் (30) என்பவரும் காதலித்து வந்தனராம். கூலி தொழிலாளியான முத்துக்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாம். ஆனால் அதனை மறைத்து அந்த இளம்பெண்ணுடன் பழகி வந்த நிலையில் அவர் 9 மாத கர்ப்பிணியானார். 

இதையடுத்து அவரது உறவினர்கள் முத்துக்குமாரிடம் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினார்களாம். அவர் எனக்கும் அந்த இளம்பெணுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அவர் வயிற்றில் வளரும் குழந்தை தனது குழந்தை இல்லை என்று கூறி மறுத்து விட்டாராம். 

இதுகுறித்து அந்த இளம் பெண்ணின் தந்தை பாளையங்கோட்டை தாலுகா மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி முத்துக்குமாரை கைது செய்தார். இதனிடையே நிறைமாத கர்ப்பிணியான அந்த இளம்பெண் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. அந்த இளம் பெண்ணுக்கும் குழந்தைக்கும் திடீரென உடல் நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று  ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. இளம் பெண்ணிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory