» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் : தென்காசி ஆட்சியர் துவக்கி வைத்தார்

சனி 22, பிப்ரவரி 2020 6:57:08 PM (IST)தென்காசியில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் துவக்கி வைத்தார்.

தமிழக அரசின் சார்பில் 2019-20ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான தென்காசி மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகள் துவங்கியது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. தென்காசி ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடகளப் போட்டி மற்றும் கபடி போட்டியும், செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் மேல்நிலைப் பள்ளியில் கூடைப்பந்து போட்டியும், இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வாலிபால், பேட்மின்டன் போட்டியும், குற்றாலம் செய்யது ரெசிடென்சியல் பள்ளியில் டென்னிஸ் மற்றும் குத்துச்சண்டை போட்டியும், இலத்தூர் பாரத் மகளிர் கல்வியியல் கல்லூரியில் ஜூடோ போட்டியும், வேல்ஸ் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் ஹாக்கி போட்டியும் நடைபெற்றது.

விளையாட்டு போட்டிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட அனைத்து சங்க உறுப்பினர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில் 945 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முடிவில் டென்னிஸ் பயிற்றுநர் குமர மணிமாறன் நன்றி கூறினார். நாளையும் (23ம் தேதி) விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory