» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சதுரகிரி மலை கோவிலுக்கு சென்ற சிவபக்தர் பலி

சனி 22, பிப்ரவரி 2020 8:44:10 PM (IST)

சதுரகிரி மலை கோவிலுக்கு மகா சிவராத்திரி வழிபாட்டிற்குச் சென்ற தென்காசி மாவட்டம் ஆய்க்குடி சிவபக்தர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி சாஸ்தான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கைலாசம் செட்டியார் மகன் ராஜகணேஷ்; (46). இவர் எல்.ஐ.சி.ஏஜெண்ட் ஆக பணியாற்றி வந்தார். சிவபக்தரான இவர் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆய்க்குடி சிவன் கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலை கோவிலுக்குச் சென்றார். ராஜகணேஷ் கோவிலுக்கு மலைமீது ஏறிச் சென்ற போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்ட இதர பக்தர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். 

ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விரைந்து சென்று ராஜகணேசை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜகணேஷ் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறிவிட்டனர்.இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜகணேசிற்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சிவ பக்தரான ராஜகணேஷ் இறந்தது ஆய்க்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory