» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கள்ளக்காதலுக்கு இடையூறு சிறுவன் அடித்துக்கொலை : தாய் கைது

திங்கள் 24, பிப்ரவரி 2020 10:56:42 AM (IST)

நெல்லையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டான்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டானாவை சேர்ந்தவர் அந்தோணி பிரகாஷ் (29). டேங்கர் லாரி டிரைவர். இவரும், பொள்ளாச்சியை சேர்ந்த தீபா (26) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தீபா நர்சிங் படித்துள்ளார். இவர்களுக்கு 4 வயதில் யோகேஷ் என்ற மகன் இருந்தான். அந்தோணி பிரகாஷ், டேங்கர் லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். 

இதனால் தீபா தனது மகனுடன் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். தீபா, அந்த பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவில் கடன் வாங்கி இருந்தார். அந்த கடன் தொகையை வசூலிக்க அதே பகுதியை சேர்ந்த சொரிமுத்து (30) என்பவர் தீபா வீட்டிக்கு அடிக்கடி வந்தாராம். இதில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 20 ம் தேதி தீபா தனது மகன் யோகேஷ் மற்றும் கள்ளக்காதலன் சொரிமுத்து ஆகியோருடன் நெல்லைக்கு வந்துள்ளார். பின்னர் அவர்கள் புதிய பேருந்துநிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். சம்பவத்தன்று சிறுவன் யோகேஷ், கட்டிலில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்ததாக கூறி அவனை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஷ் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீபாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தாய் தீபா, கள்ளக்காதலன் சொரிமுத்து ஆகியோர் சேர்ந்து சிறுவன் யோகேசை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. தீபாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய சொரிமுத்தை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory