» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் பட்ஜெட் விளக்க கருத்தரங்கம்

திங்கள் 24, பிப்ரவரி 2020 12:47:24 PM (IST)தென்காசியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் பட்ஜெட் விளக்க சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது

தென்காசியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சிக்கு தென்காசி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாரியப்பன் தலைமை தாங்கினார். எல்ஐசி  ஊழியர் சங்க நெல்லைக் கோட்ட பொதுச் செயலாளர் முத்துக்குமாரசாமி கருத்தரங்கத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.எல்ஐசி  ஊழியர் சங்க தென் மண்டல துணைத் தலைவர் சாமிநாதன் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது என்று பேசினார்.

கூட்டத்தில் எல்ஐசி ஊழியர் சங்கத்தின் சார்பில்  பொன்னையா,  வடிவேலு,  பேச்சிமுத்து,  கண்ணன்,  சிஐடியூ தொழிற்சங்கத்தின் அயூப்கான்,  பால்ராஜ்,  கிருஷ்ணன்,  லெனின், பச்சையப்பன், ஓய்வூதியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் சலீம், முகமது மீரான், மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி நாயனார்,  பொருளாளர் நாராயணன், விவவசாயிகள் சங்கத்தின் சார்பில் கணபதி,  வேல்மயில் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory