» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரெட்கிராஸ் நூற்றாண்டு தின ரத்ததான முகாம் : தென்காசி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திங்கள் 24, பிப்ரவரி 2020 12:57:29 PM (IST)

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமை தென்காசி ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் தொடங்கி வைத்தார்.

இந்தியன் ரெட் கிராஸ்  சொசைட்டி நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியின் முதல்வர் கீதா முன்னிலை வகித்தார். இளம் செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலர் பேராசிரியை பார்வதி வரவேற்று பேசினார்.

முகாமில் கல்லூரி இளம் செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் 100 பேர் இரத்த தானம் செய்தனர்.தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் பாபு தலைமையில் மருத்துவ பணியாளர்கள் மருத்துவ உதவி செய்தனர். முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் பாண்டிமாதேவி , பேராசிரியை சாந்தி, முனைவர்கள்  ராசி, சேர்மக்கனி, நித்தியகல்யாணி, ஈஸ்வரி, தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் பாண்டி தேவி, பேராசிரியைகள் லதா, சண்முகசுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory