» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் : தென்காசியில் நடைபெற்றது

திங்கள் 24, பிப்ரவரி 2020 6:55:59 PM (IST)தென்காசியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்.

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி கோட்டாட்சித்தலைவர் பழனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.1000ம் மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணையும், 10 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்பு பெட்டியும், ஆய்க்குடி கிராமம் கம்பிளி மஜரா பேச்சியம்மாள் என்பவர் தனது கணவர் குத்தால சங்கரன் கட்டிடம் இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இறந்த வகைக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் மூலம் ரூ.1 லட்சமும், திருவேங்கடம் வட்டம் பழங்கோட்டை குறுவட்டம் மகேந்திரவாடி கிராமம் மஜரா ரெங்கசமுத்திரம் கிராமம் சேதுபதி-கலைச்செல்வி தம்பதியினரின் மகன் சந்தோஷ்  என்ற சிறுவன் நாய்கள் கடித்து இறந்த வகைக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சமும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory