» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஏரி,குளத்தை தூர்வாராமல் அரசு கஜானாவை தூர்வாரியுள்ளனர் : டி.டி.வி.தினகரன் பேட்டி

திங்கள் 24, பிப்ரவரி 2020 8:19:29 PM (IST)

குடிமராமத்து பணி என்று சொல்லி கொண்டு ஏரி, குளத்தை தூர்வாராமல் அரசின் கஜானாவை தான் தூர்வாரியுள்ளதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாளையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை அங்கு 274 தனியார் நிறுவனங்கள் எண்ணெய் எடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறது. அரசு அதனை தடை செய்யாமல் விவசாயிகளின் கோரிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும். நானும் ஏழை விவசாயின் மகன்தான். முதல்வர் விவசாயி என்று கூறிக்கொண்டு இவ்வாறு செயல்பட கூடாது.

எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்து கொண்டு மத்திய அரசின் தயவில் தமிழக அரசு ஆட்சி நடத்துகிறது. இதே நிலை நீடித்தால் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள அனைத்து கட்சிகளுக்கும் அடி விழும். குடிமராமத்து பணி என்று சொல்லி கொண்டு ஏரி, குளத்தை தூர் வாராமல் அரசின் கஜானாவை தான் தூர்வாரியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory