» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி

திங்கள் 24, பிப்ரவரி 2020 8:37:00 PM (IST)தென்காசியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்சுந்தர் தயாளன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தென்காசியில் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, கோட்டாட்சித் தலைவர் பழனிக்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மரகதநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன், எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன், எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்தவொரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும் இதனை உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory