» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்புப் பிரார்த்தனை

புதன் 26, பிப்ரவரி 2020 10:40:45 AM (IST)

கிறிஸ்துவர்களின் தவக்காலத்தின் தொடக்கமான சாம்பல் புதனையொட்டி தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலியும், ஆராதனையும் புதன்கிழமை நடைபெற்றன.

கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமான சாம்பல் புதனையொட்டி தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. பாளையங்கோட்டை தூய சவேரியார் தேவாலயத்தில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ். அந்தோணிசாமி தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. 

கடந்த ஆண்டு குருத்தோலை தினத்தில் பயன்படுத்தப்பட்ட ஓலைகளை தீயில் எரித்து கிடைத்த சாம்பல் நெற்றியில் பூசி தவக்காலம் தொடங்கப்பட்டது. இதேபோல பாளையங்கோட்டையில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் தவக்காலத்தையொட்டி புதன்கிழமை காலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory