» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நான்கு வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் : தென்காசி எம்பி , ஆட்சியரிடம் கோரிக்கை

புதன் 26, பிப்ரவரி 2020 11:34:04 AM (IST)ராஜபாளையம்- செங்கோட்டை இடையேயான நான்கு வழிச்சாலை திட்டத்தினை விவசாயிகள் பாதிக்காத வகையில் மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என தென்காசி எம்.பி., தனுஷ்எம்.குமார் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

ராஜபாளையம் - செங்கோட்டை நான்கு வழிச்சாலை திட்டத்தை விவசாயிகள் பாதிக்காதவாறு செயல்படுத்த வேண்டும் என்பதை  வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள்  தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார்  தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது: 

ராஜபாளையம் முதல் செங்கோட்டை வரை அமைக்கப்படும் நான்கு வழி சாலையில் ஒரு பகுதியாக வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பகுதிகளில் உள்ள மூன்று போகமும் அமோகமாக விளையக்கூடிய நன்செய் நிலங்களை கையகப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மட்டுமல்ல இந்தப் பகுதியில் வாழும் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. விவசாய நிலங்களில் நான்கு வழி சாலை அமைப்பது இந்தப் பகுதி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த பகுதியில் நான்கு வழிச்சாலை வருவதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஆனால்  நாங்கள் விரும்புவது இந்த நான்கு வழிச்சாலையை விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் நாங்கள் குறிப்பிட்டுள்ள மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும். இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டில் பெருகிவரும் உணவு மற்றும் நீர் ஆதாரங்கள்  பேரழிவிலிருந்து காப்பாற்றப்படும். 

மேலும் பல்வேறு நன்மைகள்  இதன் மூலம் கிடைக்கும். எனவே நாங்கள் குறிப்பிடும் இந்த மாற்று பாதையில் நான்கு வழிச்சாலையை அமைக்க வேண்டும் என்பதை அரசுக்கு எடுத்துக் கூறி தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த கோரிக்கை மனுவினை  தென்காசி மாவட்ட வருவாய் அலுவலரிடமும் அளித்துள்ளனர். 

நிகழ்ச்சியில்  நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம், விவசாயிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory