» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தினகரன் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று விடுவார் : புகழேந்தி கணிப்பு

புதன் 26, பிப்ரவரி 2020 12:00:43 PM (IST)டிடிவி தினகரன் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய மாட்டார். அவருக்கு பாஸ்போர்ட் முடக்கம் நீக்கப்பட்டதும் அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று விடுவார் என தென்காசியில் கர்நாடக மாநில அதிமுக முன்னாள் செயலாளர் புகழேந்தி நிருபர்களிடம் கூறினார்.

தென்காசியில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, கர்நாடக மாநில அதிமுக முன்னாள் செயலாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் தென்காசி நகர அமமுக செயலாளரும் தென்காசி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைவருமான கண்ணன் ,  சங்கத்தின் துணைத்தலைவர் ராஜா முகம்மது,மற்றும்  தென்காசி அமமுக நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.அதனைத்தொடர்ந்து கர்நாடக மாநில அதிமுக முன்னாள் செயலாளர் புகழேந்தி பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது:- 

டிடிவி தினகரன் பணத்தைக் கொடுத்து கூட்டத்தை சேர்க்கும் மனநிலையில் இருந்து வருகிறார். அவரது மனநிலை மாறவே இல்லை. இதை போன்ற செயலை செய்து தான் சிறையில் இருக்கும் சசிகலாவை ஏமாற்றிவிட்டார். சுமார் 800 கோடியை அவரிடமிருந்து பெற்று அதனை  காலி செய்துவிட்டார். அனுபவரீதியாக சொல்லுகிறேன் அவரது  கட்சியில் உள்ள இளைஞர்களும் மற்றவர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  அவரது பாஸ்போர்ட் முடக்கம் நீக்கப்பட்டு விட்டால் டிடிவி தினகரன் வெளிநாட்டிற்கு ஓடிவிடுவார். தமிழகத்தில் அரசியல் செய்ய மாட்டார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இருக்காது. டிடிவிதினகரனை  ஓரங்கட்டிவிட்டு சசிகலா அதிமுக தலைவர்களுடன்  ஒன்றாக இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை.

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்ததும் அரசியலில் இருந்து ஒதுங்கி  ஓய்வு பெற்றுக் கொள்வார். ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும். ஒரு குடும்பத்திற்கு சென்றுவிடக்கூடாது. அதற்கான முழு முயற்சியும் நாங்கள் எடுப்போம். டிடிவி தினகரன் கட்சி. முகவரியில்லாத கட்சி. அதனுடன் வேறு யாரும் கூட்டணி சேர மாட்டார்கள். ரஜினி வீட்டு வாசலுக்கு கூட இவரை அனுமதிக்க மாட்டார். அரசியலில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் தினகரன். அதிமுகவின் ஸ்லிப்பர் செல் டிடிவி தினகரனை காலி செய்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory