» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

புதன் 26, பிப்ரவரி 2020 12:56:25 PM (IST)

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரிமாவட்டம்,சுவாமித் தோப்பு அய்யாபகவான் வைகுண்டசாமி பிறந்தநாள் விழா 03.03.2020 செவ்வாய்க் கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக திருநெல்வேலி மாவட்டஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதால் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள்,பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்தஉள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும் மேற்படி 03.03.2020 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 21.03.2020 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory