» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உள்ளாட்சி தேர்தலுக்கு 1885 வாக்குச் சாவடிகள் தயார் : தென்காசி ஆட்சியர் தகவல்

புதன் 26, பிப்ரவரி 2020 1:10:12 PM (IST)தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 1885 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான வரைவு வாக்குச் சாவடி பட்டியல்களை மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டார்.

தென்காசி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் ஊரகப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்கள் நடத்திட ஏதுவாக வரைவு வாக்குச் சாவடி பட்டியல்கள் தயார் செய்யப்பட்டன. வரைவு வாக்குச் சாவடி பட்டியல்களை மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி முத்திளங்கோவன்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தென்காசி சண்முக சுந்தரம், ஆலங்குளம் முருகன், தென்காசி நகராட்சி ஆணையாளர் (பொ) ஹசீனா, மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் பதுருநிஷா மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தென்காசி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் ஊரகப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்கள் நடத்திட ஏதுவாக மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் 282 வாக்குச் சாவடிகள், 18 பேரூராட்சிகளில் 314 வாக்குச் சாவடிகள், 10 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 1289 வாக்குச் சாவடிகள் ஆக மொத்தம் 1885 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்குச் சாவடி பட்டியல்களின் நகல்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பார்வையிடலாம். தேவைப்படின் நகல் பெற்றுக் கொள்ளலாம். வாக்குச்சாவடிகள் அமைத்தல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில்  வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் பிரதிநிதிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் வரைவு வாக்குச் சாவடி பட்டியல்களை கலந்தாலோசிப்பதற்கான கூட்டம் வரும் மார்ச் 2ம் தேதி பிற்பகல்  3 மணியளவில்  தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory