» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மூன்று பேரை வெட்டி படுகொலை செய்த வழக்கு : தூக்கு தண்டணை விதித்து நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 28, பிப்ரவரி 2020 5:46:30 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை வெட்டி கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவந்தார். அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 2016ம் ஆண்டு கோவிந்தசாமி அவரது மனைவி, மகள் ஆகியோரை முத்துராஜ் வெட்டி கொலை செய்தார். 

இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துராஜை கைதுசெய்தனர். இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில், முத்துராஜுக்கு தூக்குதண்டனை வழங்கி, நீதிபதி விஜயகுமார் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.


மக்கள் கருத்து

சாமிFeb 28, 2020 - 10:35:32 PM | Posted IP 89.21*****

இந்த நாயை அப்படியே கொன்று விட வேண்டியதுதானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory