» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருமணத்திற்கு புதுமையான வரதட்சணை கேட்ட ஆட்சியர் : பொதுமக்கள் பாராட்டு

சனி 29, பிப்ரவரி 2020 12:56:03 PM (IST)
நெல்லை பயிற்சி ஆட்சியர், தான் பிறந்த கிராமத்தில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் இலவச மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்ற வரதட்சணையுடன் மருத்துவரை திருமணம் செய்துகொண்டது வரவேற்பைப் பெற்றுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக இருப்பவர் சிவகுரு பிரபாகரன்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்த இவர்,கடினமாக படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார். சிவகுருவின் திருமணத்திற்கு பெண் பார்த்த போது அவர் விதித்த நிபந்தனை அனைவரையும் யோசிக்க வைத்தது. தான் பிறந்த கிராம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாட்களாவது இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே சிவகுரு கேட்ட வரதட்சணை. பல பெண்களும் இது சரியாக வராது என்று சிவகுருவை நிராகரித்துவிட்டனர். 

கடைசியில் சென்னை நந்தனம் கல்லூரியில் கணித பேராசிரியரின் மகள் வாரத்துக்கு இரண்டு நாட்கள் கிராம மக்களுக்கு சேவை செய்யத் தயார் என்று உறுதி அளித்தார்.இந்த சேவை உறுதிமொழியை வரதட்சணையாக பெற்ற சிவகுருவுக்கும் டாக்டர் கிருஷ்ண பாரதிக்கும் கடந்த 26ம் தேதி திருமணம் நடந்தது. தன்னுடைய கிராம மக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்த சிவகுருவை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து

செந்தில்Mar 2, 2020 - 02:56:44 PM | Posted IP 173.2*****

வாழ்த்துக்கள்

மகராஜ்Feb 29, 2020 - 03:32:05 PM | Posted IP 106.1*****

மணமகன் மற்றும் மணமகளுக்கு இனிய நல்வாழ்த்துக்கள். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory