» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தேனாம்பேட்டையில் வெடிகுண்டு வீசிய வழக்கு : தென்காசி நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

வெள்ளி 6, மார்ச் 2020 1:54:14 PM (IST)
சென்னையில் வெடிகுண்டு வீசிய வழக்கில் தென்காசி நீதிமன்றத்தில் 3 பேர் சரண் அடைந்தனர்.

சென்னையின் பிரதான பகுதிகளில் ஒன்றான தேனாம்பேட்டையில்  காமராஜர் அரங்கம் அமைந்துள்ளது.  அந்தப் பகுதியில் செவ்வாய் மதியம் நாட்டு வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது.  அந்த வெடிகுண்டு வெடித்ததில் அருகிலிருந்த கார் ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

அவர்களில் ஒருவரது வாகனப் பதிவு எண் போலி என்று கண்டறியப்பட்டது. அத்துடன் மற்றொருவர் கல்லூரி மாணவர் என்றும் சந்தேகிக்கப்பட்டது.  எனவே சந்தேகத்திற்குரிய இருவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.  இந்நிலையில் தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட விவகாரத்தில்,  மதுரை நீதிமன்றத்தில் நால்வர் சரண் அடைந்துள்ளனர். வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கமருதீன், ராஜசேகர், பிரசாந்த் மற்றும் ஜான்சன் ஆகிய 4 பேர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். 

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடிவந்தனர்.  இந்நிலையில் இவ்வழக்கில் தங்களை போலீசார் தேடுவதாக கூறி  சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த சதிஷ் (26 ), ஹரீஸ்  (20 ),தமிழ் செல்வன் என்ற செல்வா (25 ) ஆகிய மூன்று பேர்களும் தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரகதீஸ்வரன் உத்தரவிட்டார் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory