» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மார்க்கெட்டில் காய்கறி விலை மும்மடங்கு உயர்வு : பொதுமக்கள் வேதனை

செவ்வாய் 24, மார்ச் 2020 1:10:14 PM (IST)144 தடையுத்தரவு காரணமாக தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறி விலை வரலாறு காணாத அளவுக்கு மும்மடங்கு உயர்ந்தது.

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தனிமைப்படுத்துதல் அவசியம் என்பதால், நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகிறது என்று குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி, தடை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

நேற்று மதியம் சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பை வெளியிட்டவுடன் தூத்துக்குடி நகரில் மாநகராட்சி, வருவாய்துறை, காவல்துறை ஆகிய 3 துறையினரும் இணைந்து நகரில் கடைகளை அடைக்குமாறு மைக்கில் அறிவித்தனர். இதனால் நேற்று மாலைக்கு மேல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இது ஒரு புறமிருக்க இன்று மாலை 144 தடையுத்தரவு அமலுக்கு வருவதால் நேற்று இரவு முதல் தூத்துக்குடி மார்க்கெட்டில் அத்தியாவசிய காய்கறிகள் வாங்க மக்கள் குவிந்தனர்.

பாளை., ரோட்டிலுள்ள தனியார் மார்க்கெட்டில் காய்கறி விலை மும்மடங்கு உயர்ந்தது. நேற்று காலை ரூ.20க்கு விற்ற ஒரு கிலோ கத்திரிக்காய், இன்று ரூ. 80க்கு விற்கப்படுகிறது. ரூ.40க்கு விற்ற ஒரு கிலோ கேரட் இன்று ரூ. 100க்கு விற்கப்படுகிறது. ரூ. 45க்கு விற்ற வெங்காயம் ரூ. 120க்கு விற்கப்படுகிறது. ரூ. 10க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி ரூ.50 க்கு விற்கப்படுகிறது. இது போல் அனைத்து காய்கறிகளின் விலையும் மும்மடங்கு உயர்ந்தது. மார்க்கெட் நிர்வாகம் கண்துடைப்புக்கு குழாய் கட்டி 3 அடி இடைவெளி விட்டு நின்று வாங்குமாறு அறிவுறுத்தியது. கை கழுவும் இடம் கண்காணாத இடத்தில் இருந்தது. விலை உயர்வால் மார்க்கெட் வந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டில்  மக்கள் கூட்டம் முன்டியடித்து வருகிறது. மார்கெட் வியாபார நிறுவனங்கள் டீ கடை பெட்டி கடை பல சரக்குகடை ஹோட்டல் அனைத்தும் மொத்தமாக மூடப்படவேண்டும். வியாரிகள் வாகனத்தின் மூலம் தனியே தெரு தெருவாக விற்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.முழு அடைப்பே கொடிய நோயிலிருந்துமுழுமையாக நம்மை காக்கும் என்று வழக்கறிஞர் இசக்கிமுத்து தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஜாண்சன் சர்ச்சில்.பMar 26, 2020 - 09:41:02 AM | Posted IP 108.1*****

மதிப்பிற்குரிய வியாபாரிகளுக்கு ஓர் வேண்டுகோள்....தனுஸ்கோடி நிலைமை மீண்டும் வராதவண்ணம் காத்துக்கொள்ளவும்...வெள்ளைக்காரன் சாப்பிட்டுவிட்டு போட்ட எச்சில் இலையை எடுத்து அதைக்கழுவி மீன்பிடிக்க கடலுக்கு சென்று உழைத்துவிட்டு பசியோடு வருபவர்களுக்கு அன்று பரிமாறிய உணவகங்கள் இருந்த தனுஸ்கோடி எப்படி அழிந்துபோனதென்று உலகறியும்.....கொரோனோ வைரஸால் உலகமே செய்வதரியாது திகைத்துக்கொண்டிருக்கும் இந்த காலகட்டங்களில் இதுதான் சமயமென்று அத்தியாவசிய பொருட்களை அநியாயமாக விற்று சம்பாதிக்கவேண்டும் என எண்ணாதீர்கள் ஏழை எளிய மக்களை பாதிக்காதவண்ணம் நியாயமாக விற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருக்க வேண்டுகிறேன்.....இல்லையெனில் அன்று தனுஸ்கோடிக்கு ஏற்பட்ட நிலைமைதான் மீண்டும்.....

அந்தோணி சாமிழMar 25, 2020 - 07:44:09 AM | Posted IP 108.1*****

சரியான பதிவு

ராஜாMar 24, 2020 - 08:46:10 PM | Posted IP 162.1*****

வியாபாரிகள் தங்கள் நிலமையும் நாளை இப்படித்தான் என்பதை உணர வேண்டும்.

PSCCApr 16, 1585 - 02:30:00 PM | Posted IP 162.1*****

கொள்ளை கொள்ளை . மக்களை வியாபாரிகள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகுகின்றனர் . இப்படிவிற்ற பணம் இவர்களுக்கு எந்தவகையிலும் பயன் படாமல்போகட்டும் .காலம் பதில் சொல்லட்டும் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory