» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி

செவ்வாய் 24, மார்ச் 2020 1:43:19 PM (IST)

உவரியில் கள்ளக்காதல் ஜோடி கடலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பினோ(30). இவரும்,  உஷா(29) என்பவரும் காதலித்து வந்தனர். ஆனால் உஷாவிற்கு அவரது வீட்டில் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். தற்போது உஷாவிற்கு 2 குழந்தைகள் உள்ளனர்.எனினும் பினோவும், உஷாவும் தொடர்ந்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பிரியமனமில்லாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்களாம். இதற்காக நேற்று இருவரும் உவரிக்கு வந்தனர். அங்குள்ள கடலில் வி‌ஷம் குடித்துவிட்டு விழுந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை அவர்கள் மயங்கிய நிலையில் உவரி அந்தோணியார் கோவில் முன்பு கிடந்தனர். இதனை பார்த்த அப்பகுதியினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory