» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்

செவ்வாய் 24, மார்ச் 2020 5:33:35 PM (IST)தென்காசியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கண்காட்சியை டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தென்காசி மொபைல் சேல்ஸ் மற்றம் சர்வீஸ், ரீசார்ஜ் வியாபாரிகள், தமிழ்நாடு மாநில மொபைல் சங்கம், பசியில்லா தமிழகம் அறக்கட்டளை, தென்காசி நகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டது. வாகனம் ஒன்றில் மெகா சைஸ் எல்இடி டிவி மூலம் கொரானா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

முக்கிய இடங்களில் இந்த வாகனம் நின்று விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த கண்காட்சி துவக்க நிகழ்ச்சி தென்காசி காசிவிசுவநாதர் கோவில் முன்பு நடைபெற்றது.தென்காசி டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கி கண்காட்சியை துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் ஆடிவேல் முன்னிலை வகித்தார். நிகழ்;;ச்சியில் மொபைல் வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory