» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொது இடங்களில் 5பேருக்கு மேல் கூடக்கூடாது: ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

செவ்வாய் 24, மார்ச் 2020 5:38:58 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொது இடங்களில் 5பேருக்கு மேல் கூடக்கூடாது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலமும், ஊரக மற்றும் நகர பகுதிகளில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமும், தண்டோரா மூலமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும். 

கரோனா வைரஸை தடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரலாம். பொதுமக்களின் தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மளிகைக்கடை, மார்க்கெட், பலசரக்கு கடை ஆகியவை 24 மணி நேரமும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மட்டும் பொருட்கள் வாங்க வந்தால் போதும். அனைவரும் வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் கடைகளில் ஒரு மீட்டர் தொலைவில் இருந்து தான் பொருட்கள் வாங்க வேண்டும். ரே‌ஷன் கடைகள் வழக்கம் போல் திறந்து இருக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. முக்கிய தேவைக்காக வாகனங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். போலீசார் கேட்டால் உரிய காரணங்களை தெரியப்படுத்த வேண்டும். காரணம் சரியாக இருந்தால் வாகனங்கள் வெளியே செல்ல போலீசார் அனுமதி வழங்குவார்கள். 

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 220 பேர் வீடுகளில் வைத்து தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. அவர்களின் கைகளில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். மார்ச் 1–ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி வந்தவர்கள் விவரங்களை தெரிந்து கொள்ள கிராம அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் விவரங்களை சேகரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்துவார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கண்காணிப்பில் உள்ள 220 பேரை தவிர மேலும் 300 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது. அவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டும் பணி நடந்து வருகிறது. வெளிநாடுகளில் இருநது திரும்புபவர்கள் தங்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தாமல் உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என்று சென்று வருகிறார்கள். அப்படி செல்ல கூடாது. அவர்கள் கண்டிப்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு விவரங்கள் தெரியப்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடிக்கு எந்த நாட்டில் இருந்து கப்பல்கள் வந்தாலும் கப்பலில் இருப்பவர்கள் வெளியே வர அனுமதி இல்லை. பொருட்கள் மட்டுமே இறக்க அனுமதி உண்டு. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை 7 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 5 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது. 2 பேரின் ரத்த மாதிரிகள் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவு வந்த பின்னர் தான் கொரோனாவா இல்லையா என்பது தெரியவரும். கிருமி நாசினி மற்றும் முககவசங்கள் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் மகளிர் திட்டம் சார்பில் கடைகள் திறக்கப்பட்டு முக கவசங்கள், கிருமிநாசினி வழங்கப்பட உள்ளது.

மாவட்டம் முழுவதும 13 செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டத்தினர் வர தடை செய்ப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கும், முண்டியடித்து பொருட்கள் வாங்குவதற்கும் தடை விதிக்கப்படும். இதனை தாசில்தார்கள் அடங்கிய குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படும். தேவை ஏற்பட்டால் புதிய பேருந்து நிலையத்தில் உழவர் சந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆட்சியர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

CHARLIE DMar 25, 2020 - 01:58:34 PM | Posted IP 162.1*****

Next thing i want to know weather he is drunken or not bcos his activity was like that

CHARLIE DMar 25, 2020 - 01:57:22 PM | Posted IP 108.1*****

I dont know how to face this pbm .Even i travel singles in the bike That Police spoke in Madurai slang and used abusive and bad words As they are masked i m unable to identify their face.He illtreated me using bad words that i am unable to digest.But if i again go there i can sense him. So Collecter Sir Pls guide me to take steps on the particular police.Where should i come and i have all the Doctor perscription in hand and EEG reports too.I hope u ll do favour for me

CHARLIE DMar 25, 2020 - 01:49:44 PM | Posted IP 108.1*****

This incident happened at 11.45 am on 25.03.2020 on that time SP Vehicle crossed.After that only he start to beat

CHARLIE DMar 25, 2020 - 01:45:16 PM | Posted IP 108.1*****

Sir i m an Epilepsy patient i m taking medicines regularly as per Neuro Doctor advise Dr.Karunakaran.In this case medicines are going to finish so i went to buy the medicines so my dad ask me to put the petrol in voc bulk and buy the medicine in bawa medicals its near old bus stand. In this case in the Millerpuram junction a two cops slapped me and one cop bet me with stick even i went alone in bike i try to explain them but before that itself they started to beat me and they took my bike key so i ask him to give the key in a polite manner but he throw away the keys in the road and i found the key and came to my house without buying the tablets.What should i do now .You people are saying police is your friend but they treat as prisoner even the government make free for medicines and petrol bulks.i cant see the police face bcos they are masked. As a collector You please suggest me to how to get medicine and take steps on cop who r in the Millerpuram junction and now my body got worsen by their beatings they slapped and bet me in the left cheeks and heads.Please answer me Sir

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory