» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டையில் வாலிபர் வெட்டிக்கொலை : நாங்குநேரி நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

செவ்வாய் 24, மார்ச் 2020 6:26:54 PM (IST)

பாளையங்கோட்டையில் பழிக்குப்பழியாக மனைவி மற்றும் மகன் கண்முன் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் இன்று நாங்குநேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

பாளை.,அருகே உள்ள பாலாமடை இந்திரா நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (28), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பிச்சம்மாள் (25). மகள், மகன் உள்ளனர்.கடந்த 18-11-2018 அன்று பாளை வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த பால்துரை (20) என்பவர் பாலாமடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகானந்தம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தினந்தோறும் நெல்லை நீதிமன்றத்திற்கு சென்று கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை முருகானந்தம் வழக்கம்போல் நெல்லை நீதிமன்றத்திற்கு சென்று கையெழுத்திடுவதற்காக மொபட்டில் புறப்பட்டார். அப்போது அவருடைய மனைவி பிச்சம்மாள் மற்றும் மகன் வலதி ஆகியோரையும் அழைத்து சென்றார். அங்கு அவர் கையெழுத்திட்டு விட்டு, மொபட்டில் மனைவி, மகனுடன் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

பாளை  பிச்சிவன சாலை வழியாக சென்றபோது அந்த வழியாக 2 மோட்டார் பைக்குகளில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முருகானந்தத்தை சுற்றி வளைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி கொன்றது. மனைவி, மகன் கண்முன்னே முருகானந்தத்தை வெட்டிக்கொலை செய்த 4 மர்மநபர்களும் மோட்டார் பைக்குகளில் தப்பி சென்றனர். இறந்த முருகானந்தத்தின் உடலை பார்த்து மனைவி, மகன் கதறி அழுதனர்.இதுகுறித்து தகவல் அறிந்த பாளை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் கடந்த 2018-ம் ஆண்டு பால்துரை கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முருகானந்தத்தை கொலை செய்ய எதிர்தரப்பினர் திட்டம் தீட்டி நேற்று பழிக்குப்பழியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.இதையடுத்து தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க, பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோம சுந்தரம், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பாளை அருகே உள்ள மேலக்குளம் கீழூரை சேர்ந்த மகராஜன்(27), வடக்கு தாழையூத்தை சேர்ந்த ஜேக்கப்(28) மற்றும் தென்கலம்புதூரை சேர்ந்த ராமமூர்த்தி(22) ஆகியோர் இன்று காலை நாங்குநேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory