» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

144 தடை பொதுமக்கள் ஆதரவு வேண்டும் : தென்காசி ஆட்சியர் கோரிக்கை.

செவ்வாய் 24, மார்ச் 2020 7:12:59 PM (IST)

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர்  அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி தென்காசி மாவட்ட ஆட்சியர் அந்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பாரத பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சரால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   முதலமைச்சரின் 16. 03 .2020 , 19.03.2020 மற்றும் 23.03.2020 செய்திக்குறிப்பின் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்டை மாநிலங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள் ஆம்புலன்ஸ், இதர சரக்கு வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் மற்றும் தவிர்க்க இயலாத இழப்பு போன்ற காரணங்களுக்கான இலகுரக வானங்களை தவிர்த்து வேறு எந்த வாகனமும் அங்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.தமிழக எல்லைக்குள் உள்வரும் அனைவரும் நோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.  அடுத்த இரண்டு வாரங்களுக்கு மிகவும் அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற பணிகளுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. 

பொதுமக்கள் பதற்றத்துடன் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம். பலசரக்கு, காய்கறி கடைகள் மூடப்படாது. வெளிநாடுகளில் இருந்தோ அல்லது இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தோ திரும்ப வந்த பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் வீடுகளில் சுய தொற்றுநோய் தடுப்பு தனிமையை அடுத்த இரண்டு வாரத்திற்கு கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்கள் அறிவுரைப்படி மாத்திரைகளை உட்கொண்டால் போதும். சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கவும் .

நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்ட நபர்கள் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண்  0433-290548 என்ற எண்ணில் அழைத்தால் அடுத்த ஒரு மாத கால அளவுக்கு உரிய மாத்திரைகள் அனைத்தும் வீட்டிற்கே வந்து விநியோகம் செய்ய தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்லும்போது தங்களுடன் ஒரு நபரை மட்டும் அழைத்துசெல்லவும் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களையோ அல்லது குழந்தைகளையோ அழைத்துச் செல்ல வேண்டாம்.

வீட்டிற்குள் மற்றும் பணிபுரியும் இடத்தில் நுழையும் போதும் வெளியே செல்லும் போது மறக்காமல் சோப்பினால் கைகளை முழுமையாக சுத்தம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தென்காசி மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தென்காசி ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory