» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வெளிநாடுகளில் வந்தவர்கள் தீவிர கண்காணிப்பு

செவ்வாய் 24, மார்ச் 2020 7:45:30 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் 243 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனர் என தெரியவருகிறது. இவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து நம்நாட்டிற்கு வருபவர்களால் தான் பரவ துவங்கியது என தெரிய வருகிறது. நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள், சுற்றுலா செல்பவர்கள், வெளிநாடுகளில் இருந்து நம்நாட்டிற்கு பணி, சுற்றுலாவிற்கு வந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டந்தோறும் வெளிநாடுகளில் இருந்து வந்திருப்பவர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இதன்படி தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் பகுதியில்; 7 பேரும், கடையநல்லூர் பகுதியில் 101 பேரும், தென்காசி பகுதியில் 50 பேரும், செங்கோட்டை பகுதியில் 17 பேரும், கீழப்பாவூர் பகுதியில் 15 பேரும்,  குருவிகுளம் பகுதியில்  1 நபரும், சங்கரன்கோவிலில் 18 பேரும், மேலநீலித நல்லூர் பகுதியில் 7 பேரும், வாசுதேவநல்லூர் பகுதியில் 27 பேரும் ஆக மொத்தம் 243 பேர் பல்வேறு வெளிநாடுகளில் பணிக்குச் சென்று; விட்டு கடந்த 22ம் தேதி வரை திரும்பி வந்துள்ளனர்.

இவர்கள் வெளியில் எங்கும் செல்லக்கூடாது. தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், உடல் சோர்வு இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory