» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆன்லைன் சான்றிதழ்களைப் பெற வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

செவ்வாய் 24, மார்ச் 2020 8:32:56 PM (IST)

பொதுமக்கள் ஆன்லைன் சான்றிதழ்களைப் பெற வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி தென்காசி மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து பொது இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் வரும் 31.03.2020 அன்று வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. 

எனவே பொதுமக்கள் வரும் 31. 03.2020 வரை தங்களுக்கு தேவையான ஆன்லைன் சான்றிதழ்களை வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்க ஏற்கனவே தமிழக அரசினால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட டிஎன்இசேவா.இன்.ஜிஓவி.இன் என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன் பெறலாம் என்ற விபரம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory