» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தடையுத்தரவு எதிரொலி : வெறிச்சோடியது நெல்லை

புதன் 25, மார்ச் 2020 10:57:36 AM (IST)

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு கடை பிடிக்கப்படுவதையொட்டி, திருநெல்வேலி நகரம் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. 

இன்று முதல் வரும் ஏப்ரல் 14 ம் தேதி வரை மொத்த தேசமே முடக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறி இருந்தார். அதன்படி மேலும் தமிழகத்தில் வரும் 31 ம் தேதி வரை 144 தடை உத்தரவு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி திருநெல்வேலியில் மார்க்கெட்டுகள், மூடப்பட்டுள்ளது. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. சிறிய முதல் பெரிய கடைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சில மருந்தகங்கள் மட்டும் திறந்திருந்தன. மக்கள் நடமாட்டமும் இல்லாததால் மாநகரப் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.இதனிடையே இன்று கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்பதால் நேற்று மாலையில் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காண்பபட்டது. காய்கனி, இறைச்சி, மளிகைப் பொருள்களை மக்கள் அதிகளவு வாங்கிச் சென்றனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory